செவ்வாய், 3 ஏப்ரல், 2012

சிதம்பரம்

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை சிதம்பரம் நடராஜர் திருவடிகளுக்கு என் முதலாவது பதிவு சமர்ப்பணம்.
ஒரு சாதாரண பக்தையின் குமுறல்.
(நிகழ்வுகள் பழையவை எனினும், கூகுள் தளத்தில் சிதம்பரம் பற்றிய தேடலின் போது கிடைத்த வலைப் பகுதிகளில் கனன்று கொண்டிருக்கும் செய்திகளால் ஏற்பட்ட உளத் தாக்கமே இப் பதிவு.)
சிதம்பரம் கோவில் என்றதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? ஆறுமுகசாமி? தீட்சிதர்கள்? தமிழ் முழக்கம்? தீட்சிதர்கள் மேல் அடுக்கப்படும் குற்ற்றச்சாட்டுக்கள்? கூகிள் தேடலில் சிதம்பரம் கோவில் என்று தமிழில் தேடினீர்களேயானால் இப்படியான விடயங்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் இந்த சலசலப்புக்கெல்லாம் சளைக்காது அமைதியாக ஒருவர் அங்கு உள்ளார். அவரை மட்டும் யாருக்குமே ஞாபகம் வருவது கிடையாது. அட, அந்த நடராஜரைத் தாங்க சொல்றேன். மிக மிக வேதனைக் குரிய விடயம் என்னவெனில்,  அது  அவரோட இடம் என்கிறதே நமக்கு ஞாபகம் வராத அளவுக்கு செய்து விட்டார்கள் இந்த தமிழ் உணர்வாளர்கள். பக்கத்து நாட்டில் தமிழ் மூச்சுக்கே போராடிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் கோவிலில் ஆறுமுகசாமியார் பாடினால் மட்டும் தான் தமிழுக்கே உயர்வும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பவர்களை என்னவென்று சொல்வது? சரி இவர்கள் தான் இப்படி என்றால் அவர் "போலீஸ்" பாதுகாப்புடன் பாடும் போது நடராஜரைச் சுற்றி தீட்சிதர்கள். அவர்களுக்கு அது வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமே.

                              இதையெல்லாம் மீறி அமைதியாக இருக்கிறது கோவில். நல்லவேளை இன்னும் நடராஜரைச் சுற்றி இரும்புக் கம்பிகள் இல்லை. இன்னும் வரிசையில் வந்து,"நகருங்க நகருங்க" ன்னு சொல்லும் "மந்திரச்" சொற்களுடன் பார்த்துச் செல்லும் காட்சிப் பொருளாக அவர்  மாற்றப்  படவில்லை. அதற்காகத் தானே இந்தப் போராட்டம்?
 கோவில் என்பது சாதாரண கடவுள் நம்பிக்கை உள்ள மக்களுக்கான இடம். நின்று அமைதியாக தரிசனம் பண்ணவும், தன் உள்ளத்திலுள்ள வேதனைகளை கடவுளிடமாவது சொல்லி ஆறவும் சாதாரண மக்கள் வந்து செல்லும் இடம். அங்கே கம்பி  வேலிகளைப் போட்டு,"ஓகே. பார்த்தாச்சு நவுரு, நவுரு" என்று ஒருத்தர் நின்னு அதட்ட  பொது தரிசனம் பண்ணுபவர்கள் வாயை மூடிக் கொண்டு நகர, சிறப்பு தரிசனம் பண்ணுபவர்கள் " நான் பணம் குடுத்திருக்கேன், நவுருங்கர"என்னு சீறி விட்டு இன்னும் கொஞ்ச நேரம் நான் கொடுத்த காசுக்கு என்கூட இருன்னு சுவாமியைப் பார்த்து சொல்ல,- அரசாங்கம் எடுத்த கோவில் எல்லாம் இது மட்டும் தானே நடந்து கொண்டு இருக்கிறது? ஆனால் சிதம்பரத்தில் மட்டும் இன்னும் யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர் ஆட்டத்தின் அழகைத் தரிசிக்க முடிகிறதே? ஒரே ஒரு கேள்வி இது தான். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கோவில் விவகாரம்  எதற்கு? இதில் தப்பு யாருடையதாக இருந்தாலும் கண்டிக்கத் தக்கதே. 
                 இது எல்லாவற்றையும் விட சிதம்பரம் கோவிலில் வருமானக் கணக்கு பார்த்து புள்ளிவிபரங்கள் வேறு. புதையல் இருப்பதாக குறிப்பிட்ட தொலைக் காட்சியில்  செய்தி வேறு. அப்பட்டமாகவே தெரிகிறது." ஐயோ காசாச்சே காசாச்சே அனுபவிக்க விடுறானுங்க இல்லையே,எல்லாக் கோவில் உண்டியலும் அள்ளிப் பார்த்தாச்சு. இதையும் ஒரு கை பார்ப்போம்னா முடியலியே"! இந்த ஆதங்கம் தான் தெரிகிறது. இங்கு தமிழும் போலி,  வடமொழியும்  போலி.ஆனாலும் இத்தனைக்கும் சளைக்காது அப்பப்போ தன்னையும் வெளிக்  காட்டிகிட்டு அமைதியான சிரிப்போட இன்னும் அங்கே ஆடிக் கொண்டிருக்கிறாரே, அவரைச் சொல்லணும். நெசமாலுமே இது அதிசயம்  தாங்க  .
அந்த ஆனந்தத் தாண்டவரின் திருவடிகளை மட்டுமே தியானித்து அவர் திருவடிகளுக்கே இதை சமர்ப்பணம் செய்கிறேன்.